களுத்துறை - கலமுல்ல கடலில் நீராடச் சென்ற மூன்று பள்ளி மாணவர்களில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
அதில் ஒரு மாணவர் மட்டும் உயிர் பிழைத்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பயாகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை, எலுவில மற்றும் ஹொரண, கல்பத்த ஆகிய இடங்களைச் சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த மாணவர்கள் மேலதிக வகுப்புக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அந்தப் பகுதியில் உள்ள கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளனர்.
இதன் போதே இரு மாணவர்கள் காணாமல் போய் உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
களுத்துறை - கலமுல்ல கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் மாயம். களுத்துறை - கலமுல்ல கடலில் நீராடச் சென்ற மூன்று பள்ளி மாணவர்களில் இருவர் காணாமல் போயுள்ளனர்.அதில் ஒரு மாணவர் மட்டும் உயிர் பிழைத்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பயாகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பாணந்துறை, எலுவில மற்றும் ஹொரண, கல்பத்த ஆகிய இடங்களைச் சேர்ந்த 15 வயதுடைய பள்ளி மாணவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.குறித்த மாணவர்கள் மேலதிக வகுப்புக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அந்தப் பகுதியில் உள்ள கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளனர்.இதன் போதே இரு மாணவர்கள் காணாமல் போய் உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.