இந்தியா - ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தப்ப முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகத்திற்குள் தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரும் சட்டவிரோதமான முறையில் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக படகில் நேற்று இரவு இலங்கைக்கு புறப்பட முயன்றபோது கியூ பிரிவு பொலிஸார் அவர்களை ராமேஸ்வரத்தில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு நுழைய முயன்ற இருவர் அதிரடிக் கைது இந்தியா - ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தப்ப முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விமானம் மூலம் தமிழகத்திற்குள் தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் சட்டவிரோதமான முறையில் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக படகில் நேற்று இரவு இலங்கைக்கு புறப்பட முயன்றபோது கியூ பிரிவு பொலிஸார் அவர்களை ராமேஸ்வரத்தில் வைத்து மடக்கி பிடித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.