• Dec 11 2024

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைது!

Chithra / Nov 4th 2024, 11:29 am
image

 

விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கண்டி, பூவெலிகட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

22 வயதுடைய இத்தாலியப் பிரஜையும் 32 வயதுடைய பிரித்தானியப் பிரஜையுமே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கண்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் கைது  விசா இன்றி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கண்டி, பூவெலிகட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.22 வயதுடைய இத்தாலியப் பிரஜையும் 32 வயதுடைய பிரித்தானியப் பிரஜையுமே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கண்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement