களுவாஞ்சிக்குடியில் ஒரு நகைக் கடையில் அடகு வைத்து பின்னர் அதனை மீண்டும் எடுக்கும் போது அதில் 04 கிராம் வெட்டப்பட்டுள்ளது. இது வேதனைக்குரியது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட நகைத் தொழில் உரிமையாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை(18) பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நகை அடகு பிடிக்கும் போது ஒரு வருட காலத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு மேலும் உரிய நபருக்கு மூன்று தடவைகள் கடிதம் அனுப்பட வேண்டும். இதுதான் நடைமுறையாகும்.
தங்க நகைகளை அடகு வைக்கும் போது 02 வீத வட்டியில் அடகு வைக்க வேண்டும். அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் தற்காலிக அனுமதி சான்றிதழ்கள்தான் உள்ளன. வர்த்தக நிலையங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர் தான் சான்றிதழ்கள் நிரந்தமாக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அடகு வைத்து மீள எடுத்த நகையில் 4 கிராம் குறைவு; களுவாஞ்சிக்குடியில் சம்பவம் களுவாஞ்சிக்குடியில் ஒரு நகைக் கடையில் அடகு வைத்து பின்னர் அதனை மீண்டும் எடுக்கும் போது அதில் 04 கிராம் வெட்டப்பட்டுள்ளது. இது வேதனைக்குரியது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட நகைத் தொழில் உரிமையாளர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை(18) பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நகை அடகு பிடிக்கும் போது ஒரு வருட காலத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு மேலும் உரிய நபருக்கு மூன்று தடவைகள் கடிதம் அனுப்பட வேண்டும். இதுதான் நடைமுறையாகும்.தங்க நகைகளை அடகு வைக்கும் போது 02 வீத வட்டியில் அடகு வைக்க வேண்டும். அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கும் தற்காலிக அனுமதி சான்றிதழ்கள்தான் உள்ளன. வர்த்தக நிலையங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர் தான் சான்றிதழ்கள் நிரந்தமாக்கப்படும் எனத் தெரிவித்தார்.