ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உயர்மட்டக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று மாலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
கூட்டத்தில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும் உள்ளூராட்சி மன்றங்களில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உறுப்பினர்களது செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், மு.சந்திரகுமார் கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் க.துளசி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம்; மாகாண சபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உயர்மட்டக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று மாலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.கூட்டத்தில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும் உள்ளூராட்சி மன்றங்களில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் உறுப்பினர்களது செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், மு.சந்திரகுமார் கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் க.துளசி, உட்பட பலர் கலந்துகொண்டனர்.