மாத்தறை எலியகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆணும் இளம்பெண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இவ் விபத்து சம்பவம் இன்று(13) இரவு 7 மணியளவில் நிகழ்ந்துள்ளது.
பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிள் வழுக்கி, பேருந்தின் பின்புறச் சக்கரத்தின் கீழ் இருவரும் சிக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில், மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது ஆணும், மாத்தறை காசிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது விபரீதம்: இருவர் மரணம். மாத்தறை எலியகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆணும் இளம்பெண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இவ் விபத்து சம்பவம் இன்று(13) இரவு 7 மணியளவில் நிகழ்ந்துள்ளது.பேருந்து ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிள் வழுக்கி, பேருந்தின் பின்புறச் சக்கரத்தின் கீழ் இருவரும் சிக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில், மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது ஆணும், மாத்தறை காசிவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.