• Dec 28 2025

கடலில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த விபரீதம்! பறிபோன உயிர்

Chithra / Dec 20th 2025, 12:08 pm
image


ஹிக்கடுவை - வேவல பகுதியில் உள்ள கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.


உயிரிழந்தவர் 54 வயதான, பெலாருஸ் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.


இவர் ஹிக்கடுவை கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு,

பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சடலம் பலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

இந்நிலையில் ஹிக்கடுவை கடல் அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட 44 வயதுடைய ரஷ்யப் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.


நேற்று மாலை ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரால் அவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


கடற்கரையில் பணியில் இருந்த ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் புஷ்பகுமார, பொலிஸ் கான்ஸ்டபிள் ஹர்ஷ மற்றும் மிகிந்து ஆகியோர் குறித்த பெண்ணை மீட்டு அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.


கடலில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு நேர்ந்த விபரீதம் பறிபோன உயிர் ஹிக்கடுவை - வேவல பகுதியில் உள்ள கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.உயிரிழந்தவர் 54 வயதான, பெலாருஸ் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.இவர் ஹிக்கடுவை கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு,பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சடலம் பலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஹிக்கடுவை கடல் அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட 44 வயதுடைய ரஷ்யப் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்று மாலை ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரால் அவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையில் பணியில் இருந்த ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் புஷ்பகுமார, பொலிஸ் கான்ஸ்டபிள் ஹர்ஷ மற்றும் மிகிந்து ஆகியோர் குறித்த பெண்ணை மீட்டு அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement