• Dec 28 2025

அரசாங்கம் தனக்குச் சாதகமான கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்க முயற்சிக்கிறது! மரிக்கார் குற்றச்சாட்டு

Chithra / Dec 28th 2025, 3:14 pm
image

 தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்கத் தவறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.


எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி  தலைமையகத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


கணக்காய்வாளர் நாயக பதவிக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட இருவரின் பெயர்களையும் அரசியலமைப்பு சபை நிராகரித்துள்ள நிலையில், கடந்த 8 மாதங்களாக அந்தப் பதவி வெற்றிடமாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


தற்போது கடமையாற்றும் பதில் கணக்காய்வாளர் நாயகம் தகுதியற்றவர் என்றால், அதற்கான காரணத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசியலமைப்பு சபையிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கப்பாட்டுடன் இடம்பெற வேண்டிய இந்த நியமனங்களில், தமக்குச் சாதகமானவர்களை உள்வாங்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.


அரசாங்கத்தின் அமைச்சின்கீழ் உள்ள நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் 'கிளீன் ஸ்ரீலங்கா' போன்ற திட்டங்களுக்கான நிதி செலவிடப்பட்ட விதம் குறித்து 2026 ஆம் ஆண்டிலேயே தணிக்கை செய்யப்படவுள்ளது. 


இதன்போது அரசாங்கத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகள் வெளிப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே, தமக்கு விசுவாசமான ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


மேலும், ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளையும் அவர் வன்மையாகக் கண்டித்தார். 


அரசாங்கம் தனக்குச் சாதகமான கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்க முயற்சிக்கிறது மரிக்கார் குற்றச்சாட்டு  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்கத் தவறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி  தலைமையகத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.கணக்காய்வாளர் நாயக பதவிக்கு ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட இருவரின் பெயர்களையும் அரசியலமைப்பு சபை நிராகரித்துள்ள நிலையில், கடந்த 8 மாதங்களாக அந்தப் பதவி வெற்றிடமாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.தற்போது கடமையாற்றும் பதில் கணக்காய்வாளர் நாயகம் தகுதியற்றவர் என்றால், அதற்கான காரணத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரசியலமைப்பு சபையிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கப்பாட்டுடன் இடம்பெற வேண்டிய இந்த நியமனங்களில், தமக்குச் சாதகமானவர்களை உள்வாங்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.அரசாங்கத்தின் அமைச்சின்கீழ் உள்ள நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் 'கிளீன் ஸ்ரீலங்கா' போன்ற திட்டங்களுக்கான நிதி செலவிடப்பட்ட விதம் குறித்து 2026 ஆம் ஆண்டிலேயே தணிக்கை செய்யப்படவுள்ளது. இதன்போது அரசாங்கத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகள் வெளிப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே, தமக்கு விசுவாசமான ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும், ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளையும் அவர் வன்மையாகக் கண்டித்தார். 

Advertisement

Advertisement

Advertisement