டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரயில் மார்க்கத்தில் 79 சதவீத புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் ரயில் மார்க்கத்தில் 1593 கிலோமீட்டர் வரை சேதமடைந்துள்ளது. அவற்றில் 1254 கிலோமீட்டர் வரையான மார்க்கம் புனரமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மலையகம், புத்தளம் மற்றும் தலைமன்னார் ரயில் மார்க்கங்களில் தொடர்ந்தும் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
அதற்கமைய, தலைமன்னார் மார்க்கமானது மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரை பல இடங்களில் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இயலுமான அளவில் அதனை விரைவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மலையக ரயில் மார்க்கத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் ரம்புக்கனையிலிருந்து பேராதனை ஊடாக மாத்தளை வரையான ரயில் மார்க்கமும், ரம்புக்கணையில் இருந்து பேராதனை ஊடாக அம்பேவல வரையான மார்க்கமும் தொடர்ந்தும் போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியாத நிலையில் உள்ளது.
அத்துடன் புத்தளம் ரயில் மார்க்கத்தில் நாத்தான்டியாவிலிருந்து புத்தளம் வரையான ரயில் மார்க்கமும் சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய ரயில் மார்க்கங்களை விரைவில் புனரமைப்பு செய்து, போக்குவரத்தை முழுமையாக வழமைக்குத் திருப்புவதற்கு முயற்சித்து வருவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
டிட்வாவினால் அழிவடைந்த ரயில் மார்க்கங்களில் 79 சதவீத புனரமைப்பு நிறைவு டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரயில் மார்க்கத்தில் 79 சதவீத புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். நாட்டின் ரயில் மார்க்கத்தில் 1593 கிலோமீட்டர் வரை சேதமடைந்துள்ளது. அவற்றில் 1254 கிலோமீட்டர் வரையான மார்க்கம் புனரமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மலையகம், புத்தளம் மற்றும் தலைமன்னார் ரயில் மார்க்கங்களில் தொடர்ந்தும் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. அதற்கமைய, தலைமன்னார் மார்க்கமானது மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரை பல இடங்களில் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதனைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இயலுமான அளவில் அதனை விரைவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மலையக ரயில் மார்க்கத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ரம்புக்கனையிலிருந்து பேராதனை ஊடாக மாத்தளை வரையான ரயில் மார்க்கமும், ரம்புக்கணையில் இருந்து பேராதனை ஊடாக அம்பேவல வரையான மார்க்கமும் தொடர்ந்தும் போக்குவரத்தில் ஈடுபடுத்த முடியாத நிலையில் உள்ளது. அத்துடன் புத்தளம் ரயில் மார்க்கத்தில் நாத்தான்டியாவிலிருந்து புத்தளம் வரையான ரயில் மார்க்கமும் சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய ரயில் மார்க்கங்களை விரைவில் புனரமைப்பு செய்து, போக்குவரத்தை முழுமையாக வழமைக்குத் திருப்புவதற்கு முயற்சித்து வருவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.