• Mar 26 2026

எரிசக்தி சவாலை முறியடிக்க ‘வீட்டிலிருந்து வேலை’ ! வெளியான பல முக்கிய தீர்மானங்கள்!

Chithra / Mar 17th 2026, 8:03 am
image

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சவால்களை முகாமைத்துவம் செய்து, 

நாட்டின் பொருளாதாரத்தைச் சீராக முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் தற்போதைய முதன்மை நோக்கம் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். குறிப்பாக கல்வி, சுகாதாரம், சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, குறைந்தபட்ச எரிசக்தி நுகர்வுடன் சேவைகளைத் தொடர நிபுணர் குழுக்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

எரிபொருள் சிக்கனத்தைக் கருத்திற்கொண்டு அரச துறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது:

அரச ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவதன் மூலம் எரிசக்தி நுகர்வைக் கட்டுப்படுத்துதல்.

அத்தியாவசியமற்ற பிரிவுகளில் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை அறிமுகப்படுத்துதல். 

ஊழியர்களைப் பணிக்கு அழைப்பது குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அந்தந்த நிறுவனத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு அரச வைபவங்களைத் தற்காலிகமாக நிறுத்துதல்.

இதேவேளை, ‘வீட்டிலிருந்து வேலை’ செய்யும் முறை குறித்து நிலவும் குழப்பங்களுக்குப் பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன விளக்கமளித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு தீவிரமாக 

அவதானம் செலுத்தி வருகின்ற போதிலும், அது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

"அரச நிறுவனங்களின் வினைத்திறன் (Efficiency) பாதிக்கப்படாத வகையில் இந்த நடைமுறையை எங்ஙனம் அமுல்படுத்துவது என்பது குறித்து விரிவான ஆய்வுகள் மற்றும் துறைசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. முறையான தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்," என அமைச்சர் தெரிவித்தார்.

தினசரி எரிபொருள் நுகர்வை முகாமைத்துவம் செய்ய QR குறியீட்டு முறையை மேலும் முறைப்படுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சு இணைந்து செயற்படவுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு மானிய முறைகள் மூலம் வசதிகளை வழங்க ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.அரசாங்கம் எடுக்கும் இந்த அவசர நடவடிக்கைகள் குறித்துத் தனியார் துறைக்கும் தெளிவுபடுத்தப்படவுள்ளது.

எரிசக்தி சவாலை முறியடிக்க ‘வீட்டிலிருந்து வேலை’ வெளியான பல முக்கிய தீர்மானங்கள் மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சவால்களை முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரத்தைச் சீராக முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தி, அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதே அரசாங்கத்தின் தற்போதைய முதன்மை நோக்கம் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். குறிப்பாக கல்வி, சுகாதாரம், சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, குறைந்தபட்ச எரிசக்தி நுகர்வுடன் சேவைகளைத் தொடர நிபுணர் குழுக்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.எரிபொருள் சிக்கனத்தைக் கருத்திற்கொண்டு அரச துறையில் சில மாற்றங்களைக் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது:அரச ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவதன் மூலம் எரிசக்தி நுகர்வைக் கட்டுப்படுத்துதல்.அத்தியாவசியமற்ற பிரிவுகளில் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை அறிமுகப்படுத்துதல். ஊழியர்களைப் பணிக்கு அழைப்பது குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அந்தந்த நிறுவனத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு அரச வைபவங்களைத் தற்காலிகமாக நிறுத்துதல்.இதேவேளை, ‘வீட்டிலிருந்து வேலை’ செய்யும் முறை குறித்து நிலவும் குழப்பங்களுக்குப் பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன விளக்கமளித்துள்ளார்.அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு தீவிரமாக அவதானம் செலுத்தி வருகின்ற போதிலும், அது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்."அரச நிறுவனங்களின் வினைத்திறன் (Efficiency) பாதிக்கப்படாத வகையில் இந்த நடைமுறையை எங்ஙனம் அமுல்படுத்துவது என்பது குறித்து விரிவான ஆய்வுகள் மற்றும் துறைசார் அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. முறையான தீர்மானம் எட்டப்பட்ட பின்னரே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்," என அமைச்சர் தெரிவித்தார்.தினசரி எரிபொருள் நுகர்வை முகாமைத்துவம் செய்ய QR குறியீட்டு முறையை மேலும் முறைப்படுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சு இணைந்து செயற்படவுள்ளன.எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு மானிய முறைகள் மூலம் வசதிகளை வழங்க ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.அரசாங்கம் எடுக்கும் இந்த அவசர நடவடிக்கைகள் குறித்துத் தனியார் துறைக்கும் தெளிவுபடுத்தப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement