• Oct 18 2025

முச்சக்கர வண்டியோடு மோதி கடைக்குள் புகுந்த டிப்பர் வாகனம்; யாழில் சம்பவம்

Chithra / Oct 17th 2025, 8:38 am
image


யாழ்ப்பாணத்திற்கு கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனம், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியோடு மோதியதோடு அருகிலிருந்து கடைத் தொகுதிக்குள் புகுந்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சியிலிருந்து கற்களை ஏற்றியவாறு யாழ்ப்பாணத்திற்கு பயணித்த டிப்பர் வாகனம், 

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியோடு மோதியதோடு கடை தொகுதிக்குள்ளும் புகுந்துள்ளது.

இதனால் கடைத் தொகுதியின் வாசல் கதவுகள் முற்றாக சேதம் அடைந்துள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


முச்சக்கர வண்டியோடு மோதி கடைக்குள் புகுந்த டிப்பர் வாகனம்; யாழில் சம்பவம் யாழ்ப்பாணத்திற்கு கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனம், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியோடு மோதியதோடு அருகிலிருந்து கடைத் தொகுதிக்குள் புகுந்துள்ளது.இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.கிளிநொச்சியிலிருந்து கற்களை ஏற்றியவாறு யாழ்ப்பாணத்திற்கு பயணித்த டிப்பர் வாகனம், சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியோடு மோதியதோடு கடை தொகுதிக்குள்ளும் புகுந்துள்ளது.இதனால் கடைத் தொகுதியின் வாசல் கதவுகள் முற்றாக சேதம் அடைந்துள்ளன.சம்பவத்தில் காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement