• May 25 2026

Chithra / Apr 4th 2025, 7:08 pm
image

 

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் ஹெரோயினுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 2 கிராம் 780 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூன்று சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் நாவற்குழி பகுதியையும், ஒருவர் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் மூன்று இளைஞர்கள் கைது  யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் ஹெரோயினுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது 2 கிராம் 780 மில்லிகிராம் ஹெரோயினுடன் மூன்று சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் நாவற்குழி பகுதியையும், ஒருவர் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement