• Aug 14 2025

மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுமி; கோர விபத்தில் பலி

Chithra / Aug 13th 2025, 8:02 am
image


சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார். 

தம்புள்ளை - சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சசித்மி நெஹன்சா அலுவிஹாரே என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர், அவரது மகளை முன் இருக்கையில் வைத்துக்கொண்டு பயணித்துள்ளார். 

இதன்போது ,மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளின் முன் இருக்கையில் இருந்த மகள் வீதியில் தூக்கி வீசப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்துக்குள்ளான காரும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டதாக சிகிரியா பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுமி; கோர விபத்தில் பலி சீகிரியம திகம்பதஹா வீதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்று மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார். தம்புள்ளை - சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சசித்மி நெஹன்சா அலுவிஹாரே என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர், அவரது மகளை முன் இருக்கையில் வைத்துக்கொண்டு பயணித்துள்ளார். இதன்போது ,மோட்டார் சைக்கிள் கார் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளின் முன் இருக்கையில் இருந்த மகள் வீதியில் தூக்கி வீசப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்துக்குள்ளான காரும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டதாக சிகிரியா பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிகிரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement