இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விமானப்படை மற்றும் இராணுவ விசேட படையைச் சேர்ந்த 6 வீரர்களின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, தெஹியத்தகண்டிய நீதவான் பிரியந்த ஹால்யால முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமை விமானி சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியமைக்கு காரணம் தனது தவறு அல்ல என்று தான் நம்புவதாக தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன மேலும் சாட்சியமளித்தார்.
ஹெலிகொப்டர் ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார், ஆனால் ஒரு குறிப்பிட்ட காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விபத்தில் இறந்த இரண்டு விமானப்படை வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளார்.
இலங்கையை உலுக்கிய ஹெலிகொப்டர் விபத்து; நீதிமன்றில் விமானி வழங்கிய வாக்குமூலம் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விமானப்படை மற்றும் இராணுவ விசேட படையைச் சேர்ந்த 6 வீரர்களின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, தெஹியத்தகண்டிய நீதவான் பிரியந்த ஹால்யால முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமை விமானி சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியமைக்கு காரணம் தனது தவறு அல்ல என்று தான் நம்புவதாக தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன மேலும் சாட்சியமளித்தார். ஹெலிகொப்டர் ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார், ஆனால் ஒரு குறிப்பிட்ட காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விபத்தில் இறந்த இரண்டு விமானப்படை வீரர்கள் மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளார்.