• Sep 14 2025

இன்று பிற்பகல் மழைக்கு வாய்ப்பு ; பலத்த காற்றும் வீசும் மக்களுக்கு எச்சரிக்கை!

shanuja / Sep 13th 2025, 11:33 am
image

நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 



வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிக்கையிலேயே மேற்கண்டவாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது. 



அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் .


கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.  


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 


எனவே இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று, மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய  பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 


இதேவேளை நேற்றுமுன்தினம் யாழில் திடீரென சுழற்றிய கனமழையால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.என.சூரியராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் மழைக்கு வாய்ப்பு ; பலத்த காற்றும் வீசும் மக்களுக்கு எச்சரிக்கை நாட்டில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்வதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிக்கையிலேயே மேற்கண்டவாறு எதிர்வுகூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடும் .கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று, மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய  பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இதேவேளை நேற்றுமுன்தினம் யாழில் திடீரென சுழற்றிய கனமழையால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக யாழ.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் ரி.என.சூரியராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement