• Sep 09 2025

யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கர வாள்வெட்டு; வேனில் வந்த கும்பலால் கதிகலங்கிய இளைஞன்

Chithra / Sep 9th 2025, 12:30 pm
image

 

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வேனில் வந்த கும்பல் ஒன்று, மோட்டார் சைக்கிளில் சென்ற  நபரை மோதி விழுத்தி, அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து  யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கர வாள்வெட்டு; வேனில் வந்த கும்பலால் கதிகலங்கிய இளைஞன்  யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,வேனில் வந்த கும்பல் ஒன்று, மோட்டார் சைக்கிளில் சென்ற  நபரை மோதி விழுத்தி, அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.இந்நிலையில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து  யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement