• Oct 14 2026

கணவனைப் பறிகொடுத்த மனைவிக்கும் நேர்ந்த துயரம் - இன்று அதிகாலை வெளியான அதிர்ச்சித் தகவல்!

Chithra / Oct 11th 2026, 10:44 am
image


களுத்துறை – நாகொட பகுதியில் உணவகம் ஒன்றின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தற்போது மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.


கடந்த 9ஆம் திகதி காலை 7.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.


இதில் உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


இதற்கிடையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய நபர், நேற்று மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த உணவக உரிமையாளரின் மனைவியும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இதனையடுத்து, குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.


சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த நபரைக் குறிவைத்து T-56 ரக துப்பாக்கியால் 30 தோட்டாக்களும் தீரும் வரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


குறித்த தாக்குதலுக்கு முன்னர் சந்தேகநபர்கள் வியாபார நிலையமொன்றுக்கு அருகில் துப்பாக்கியைத் தயார் செய்யும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.


சில வருடங்களுக்கு முன்னர் அமிலத் தாக்குதலுக்கு உள்ளானதால் உயிரிழந்தவரின் இரு கண்களின் பார்வையும் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் போம்புவல நவீனுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்திருக்கலாம் எனவும், போதைப்பொருள் வர்த்தகப் பணப் பரிவர்த்தனை தொடர்பான முரண்பாட்டை அடுத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


கணவனைப் பறிகொடுத்த மனைவிக்கும் நேர்ந்த துயரம் - இன்று அதிகாலை வெளியான அதிர்ச்சித் தகவல் களுத்துறை – நாகொட பகுதியில் உணவகம் ஒன்றின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தற்போது மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.கடந்த 9ஆம் திகதி காலை 7.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.இதில் உணவக உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி நாகொட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இதற்கிடையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 35 வயதுடைய நபர், நேற்று மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த உணவக உரிமையாளரின் மனைவியும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இதனையடுத்து, குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த நபரைக் குறிவைத்து T-56 ரக துப்பாக்கியால் 30 தோட்டாக்களும் தீரும் வரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த தாக்குதலுக்கு முன்னர் சந்தேகநபர்கள் வியாபார நிலையமொன்றுக்கு அருகில் துப்பாக்கியைத் தயார் செய்யும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.சில வருடங்களுக்கு முன்னர் அமிலத் தாக்குதலுக்கு உள்ளானதால் உயிரிழந்தவரின் இரு கண்களின் பார்வையும் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் போம்புவல நவீனுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்திருக்கலாம் எனவும், போதைப்பொருள் வர்த்தகப் பணப் பரிவர்த்தனை தொடர்பான முரண்பாட்டை அடுத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement