• Oct 14 2026

இலங்கையிலிருந்து செல்லும் விமான சேவைகள் இரத்து! – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு

Chithra / Oct 12th 2026, 12:13 pm
image


சவூதி அரேபியாவில் நேற்று (11) இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கொழும்புக்கும் தம்மாமுக்கும் இடையிலான விமான சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.


அதன்படி, இன்று (12) மற்றும் நாளை (13) கொழும்புக்கும் சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில் சேவையில் ஈடுபடவிருந்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.


குறிப்பாக, UL253 மற்றும் UL254 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்துக்கான விமான சேவைகளையும் அடுத்த வாரம் வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே இரத்து செய்துள்ளது.


சவூதி அரேபியாவுக்கான எதிர்வரும் விமான சேவைகள் தொடர்பான மேலதிக அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதனால், சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்புகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இலங்கையிலிருந்து செல்லும் விமான சேவைகள் இரத்து – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முக்கிய அறிவிப்பு சவூதி அரேபியாவில் நேற்று (11) இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கொழும்புக்கும் தம்மாமுக்கும் இடையிலான விமான சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.அதன்படி, இன்று (12) மற்றும் நாளை (13) கொழும்புக்கும் சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில் சேவையில் ஈடுபடவிருந்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக, UL253 மற்றும் UL254 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்துக்கான விமான சேவைகளையும் அடுத்த வாரம் வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே இரத்து செய்துள்ளது.சவூதி அரேபியாவுக்கான எதிர்வரும் விமான சேவைகள் தொடர்பான மேலதிக அறிவிப்புகள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனால், சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்புகளைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement