• Jul 19 2025

ஆசிரியர்கள் திட்டியதால் பூச்சிக்கொல்லி அருந்தி மாணவன் உயிரிழப்பு!

shanuja / Jul 18th 2025, 4:28 pm
image

பாடசாலையில் ஆசிரியர்கள் திட்டியதால் மாணவன் ஒருவன் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி உயிரிழந்த சம்பவம் பாடசாலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த விபரீத சம்பவம் நெல்லை மாவட்டம் வீரநல்லூர் உள்ள தனியார்  பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 


குறித்த பாடசாலையில் கடந்த 7 ஆம் திகதி நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் சபரி கண்ணன் என்ற மாணவனை ஆசியர்கள் திட்டியதுடன் அடுத்தநாள்  பாடசாலைக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வரும்படியும் தெரிவித்துள்ளனர். 


ஆனால் , தனது பெற்றோரை அழைத்துச் செல்லாத  சபரிகண்ணன்,  பாடசாலை வளாகத்திலேயே வைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளார்.  சற்றுநேரத்தின் பின்னர் மாணவன் சபரிகண்ணன் மயங்கி விழுந்துள்ளார்.


அதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மாணவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவனான சபரிக்கண்ணன் சிகிச்சை பலனின்றி  நேற்று உயிரிழிந்தார். 


மாணவர் உயிரிழந்ததை கண்டித்து , வீரநல்லூர் பொலிஸ்நிலையத்திற்கு முன்பு மாணவனின் உடலோடு 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தின் போது  ஆசியர்கள் உட்பட  5 பேர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று  கோசங்களை எழுப்பியிருந்தனர். இதனால், திருநெல்வேலி பாபநாசம் சாலையில் 20 நிமிடம்  பாதிப்பு ஏற்பட்டது. 

 

போராட்டம் முடிவடைந்த பின்னர், நள்ளிரவில் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள், குறித்த பாடசாலையின்  இரண்டு  பேருந்துகளுக்கு தீ வைத்ததால் பேருந்து தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  


மாணவனின் உயிரிழப்பையடுத்து போராட்டம் நடத்தப்பட்டு, பேருந்துகள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவங்கள் அப்பகுதியை பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

ஆசிரியர்கள் திட்டியதால் பூச்சிக்கொல்லி அருந்தி மாணவன் உயிரிழப்பு பாடசாலையில் ஆசிரியர்கள் திட்டியதால் மாணவன் ஒருவன் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி உயிரிழந்த சம்பவம் பாடசாலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத சம்பவம் நெல்லை மாவட்டம் வீரநல்லூர் உள்ள தனியார்  பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 7 ஆம் திகதி நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் சபரி கண்ணன் என்ற மாணவனை ஆசியர்கள் திட்டியதுடன் அடுத்தநாள்  பாடசாலைக்கு வரும்போது பெற்றோரை அழைத்து வரும்படியும் தெரிவித்துள்ளனர். ஆனால் , தனது பெற்றோரை அழைத்துச் செல்லாத  சபரிகண்ணன்,  பாடசாலை வளாகத்திலேயே வைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வகுப்பறைக்கு சென்றுள்ளார்.  சற்றுநேரத்தின் பின்னர் மாணவன் சபரிகண்ணன் மயங்கி விழுந்துள்ளார்.அதனையடுத்து பாடசாலை நிர்வாகம் மாணவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவனான சபரிக்கண்ணன் சிகிச்சை பலனின்றி  நேற்று உயிரிழிந்தார். மாணவர் உயிரிழந்ததை கண்டித்து , வீரநல்லூர் பொலிஸ்நிலையத்திற்கு முன்பு மாணவனின் உடலோடு 200க்கும் மேற்பட்ட உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தின் போது  ஆசியர்கள் உட்பட  5 பேர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று  கோசங்களை எழுப்பியிருந்தனர். இதனால், திருநெல்வேலி பாபநாசம் சாலையில் 20 நிமிடம்  பாதிப்பு ஏற்பட்டது.  போராட்டம் முடிவடைந்த பின்னர், நள்ளிரவில் உயிரிழந்த மாணவனின் உறவினர்கள், குறித்த பாடசாலையின்  இரண்டு  பேருந்துகளுக்கு தீ வைத்ததால் பேருந்து தீயில் எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  மாணவனின் உயிரிழப்பையடுத்து போராட்டம் நடத்தப்பட்டு, பேருந்துகள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவங்கள் அப்பகுதியை பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement