• Aug 20 2025

நாட்டில் அதிகளவான கஞ்சாவை உற்பத்தி செய்யும் இலங்கை அரசாங்கம் - நாமல் குற்றச்சாட்டு

Chithra / Aug 19th 2025, 3:38 pm
image


இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டில் அதிகளவான கஞ்சாவையும் கசினோவையும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கினறனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“தற்போது அரச வருமானம் அதிகரித்துள்ளது. மோசமான முறையில் வரி அதிகரிக்கப்பட்டு மக்கள் மீது வரி சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மின்சார கட்டணத்தை 35 வீதத்தால் குறைப்போம் என்று கூறினார்கள், உரமானியம் வழங்குவோம் எனக் கூறினார்கள், நெல்கொடுப்பனவு முற்றிலும் தடைப்பட்டுள்ளது.

அரிசி மாபியாவை இல்லாமல் செய்வோம் எனக் கூறியவர்கள் தற்போது வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றனர். 

முன்னைய அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்யும் போது கமிசன் பெற்றுக்கொள்வதற்காகவே இறக்குமதி செய்கிறார்கள் என்று கூறியவர்கள் இப்போது எதற்காக இறக்குமதி செய்கின்றார்களோ தெரியவில்லை.

நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கப்பலில் ஏற்றியவுடன் எவ்வளவு கிடைக்கின்றத என்று பாருங்கள். நீங்கள் அரச வருமானத்தை அதிகரித்திருந்தாலும் அதனால் மக்களுக்கு என்ன வருமானம் கிடைக்கின்றது என்று பாருங்கள். 

வரி செலுத்தும் மக்களுக்காக நீங்கள் கொடுக்கும் பலன்கள் பிரதிபலன்கள் என்ன? என்வென்று பார்த்தால் ஒன்றும் இல்லை. அன்று நாங்கள் திருடுகின்றோம் எனக் குற்றம்சாட்டினார்கள்.ஆனால் நாம் இன்று அப்படி சொல்லமாட்டோம்.

ஆனால் சில விடயங்கள் வெளியில் வரலாம், அதற்கு அரசாங்கம் தயாராகிவருவதையும் நாம் காண்கின்றோம்.

அரச வருமானம் அதிகரித்து அதனூடாக வரியை அதிகரிக்கும் போது, அரச சேவை உள்ளிட்ட அரச கட்டமைப்பு வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் மூலம் முழு அரச பொறிமுறையே வீழ்ச்சியடையும் வகையிலேயே இருக்கின்றது.

நீதிமன்ற கட்டமைப்பிற்கு தங்களின் அரசியலை புகுத்துவது தான் தற்போது இவர்களின் செய்பாடாக இருக்கின்றது. இதனடிப்படையில் ஜனாதிபதி செயலாளர் நியமிக்கப்பட்டார், சி.ஐ.டிக்கு பொறுப்பானவர் தன்னிச்சையாக நியமிக்கப்பட்டார், அது போலவே நீதித்துறையையும் இவர்கள் அரசியல் மயமாக்கத் திட்டமிடுகின்றனர்.

நீதிமன்றம் சுயாதீனமாக இருக்கின்றது. எனவே ஆளும்தரப்பினர் சிலர் மீத இருக்கும் வழக்கை இவர்கள் நீக்கியிருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி எங்கள் மீது சொத்துக் குவிப்பு குற்றம் சாட்டுபவர்கள் அநுராதபுரத்தில் வீடுகள் வைத்திருக்கின்றார்கள். 

எனவே நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்க வேண்டும் எனவே அதற்கேற்ற வகையில் நீதிபதிகள் நியமனத்தில் குளறுபடிகள் செய்ய வேண்டாம் என்பதோடு, கடற்படை அதிகாரிகளை நியமிப்பதில் இவர்கள் தங்களின் தலையீட்டை முன்னெடுத்துள்ளனர்.

தற்போது நாட்டில் ஹர்த்தால்கள் நடக்கின்றன. இந்த ஹர்த்தால் கலாசாரத்தை ஆரம்பித்தவர்களே நீங்கள் தானே, தற்போது இந்த அரசியலில் புதிய முயற்சிகளை கொண்டுவர முயன்றாலும் அது நடக்கவில்லை. 

எனவே இப்போது நாட்டில் ஏதோவொரு மூலையில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சுட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே இப்படியான சம்பவங்கள் இடம்பெறும் போது முதலீட்டாளர்கள் நாட்டிற்குள் வரமாட்டார்கள்.  

எனவே நாடாளுமன்றில் எத்தகைய சட்டங்களை இயற்றினாலும் ஆயுத கலாசாரம் கட்டவிழ்த்து விடப்படும் போது அது நடக்காது” எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகளவான கஞ்சாவை உற்பத்தி செய்யும் இலங்கை அரசாங்கம் - நாமல் குற்றச்சாட்டு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டில் அதிகளவான கஞ்சாவையும் கசினோவையும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கினறனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “தற்போது அரச வருமானம் அதிகரித்துள்ளது. மோசமான முறையில் வரி அதிகரிக்கப்பட்டு மக்கள் மீது வரி சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தை 35 வீதத்தால் குறைப்போம் என்று கூறினார்கள், உரமானியம் வழங்குவோம் எனக் கூறினார்கள், நெல்கொடுப்பனவு முற்றிலும் தடைப்பட்டுள்ளது.அரிசி மாபியாவை இல்லாமல் செய்வோம் எனக் கூறியவர்கள் தற்போது வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றனர். முன்னைய அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்யும் போது கமிசன் பெற்றுக்கொள்வதற்காகவே இறக்குமதி செய்கிறார்கள் என்று கூறியவர்கள் இப்போது எதற்காக இறக்குமதி செய்கின்றார்களோ தெரியவில்லை.நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கப்பலில் ஏற்றியவுடன் எவ்வளவு கிடைக்கின்றத என்று பாருங்கள். நீங்கள் அரச வருமானத்தை அதிகரித்திருந்தாலும் அதனால் மக்களுக்கு என்ன வருமானம் கிடைக்கின்றது என்று பாருங்கள். வரி செலுத்தும் மக்களுக்காக நீங்கள் கொடுக்கும் பலன்கள் பிரதிபலன்கள் என்ன என்வென்று பார்த்தால் ஒன்றும் இல்லை. அன்று நாங்கள் திருடுகின்றோம் எனக் குற்றம்சாட்டினார்கள்.ஆனால் நாம் இன்று அப்படி சொல்லமாட்டோம்.ஆனால் சில விடயங்கள் வெளியில் வரலாம், அதற்கு அரசாங்கம் தயாராகிவருவதையும் நாம் காண்கின்றோம்.அரச வருமானம் அதிகரித்து அதனூடாக வரியை அதிகரிக்கும் போது, அரச சேவை உள்ளிட்ட அரச கட்டமைப்பு வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதன் மூலம் முழு அரச பொறிமுறையே வீழ்ச்சியடையும் வகையிலேயே இருக்கின்றது.நீதிமன்ற கட்டமைப்பிற்கு தங்களின் அரசியலை புகுத்துவது தான் தற்போது இவர்களின் செய்பாடாக இருக்கின்றது. இதனடிப்படையில் ஜனாதிபதி செயலாளர் நியமிக்கப்பட்டார், சி.ஐ.டிக்கு பொறுப்பானவர் தன்னிச்சையாக நியமிக்கப்பட்டார், அது போலவே நீதித்துறையையும் இவர்கள் அரசியல் மயமாக்கத் திட்டமிடுகின்றனர்.நீதிமன்றம் சுயாதீனமாக இருக்கின்றது. எனவே ஆளும்தரப்பினர் சிலர் மீத இருக்கும் வழக்கை இவர்கள் நீக்கியிருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி எங்கள் மீது சொத்துக் குவிப்பு குற்றம் சாட்டுபவர்கள் அநுராதபுரத்தில் வீடுகள் வைத்திருக்கின்றார்கள். எனவே நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்க வேண்டும் எனவே அதற்கேற்ற வகையில் நீதிபதிகள் நியமனத்தில் குளறுபடிகள் செய்ய வேண்டாம் என்பதோடு, கடற்படை அதிகாரிகளை நியமிப்பதில் இவர்கள் தங்களின் தலையீட்டை முன்னெடுத்துள்ளனர்.தற்போது நாட்டில் ஹர்த்தால்கள் நடக்கின்றன. இந்த ஹர்த்தால் கலாசாரத்தை ஆரம்பித்தவர்களே நீங்கள் தானே, தற்போது இந்த அரசியலில் புதிய முயற்சிகளை கொண்டுவர முயன்றாலும் அது நடக்கவில்லை. எனவே இப்போது நாட்டில் ஏதோவொரு மூலையில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சுட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எனவே இப்படியான சம்பவங்கள் இடம்பெறும் போது முதலீட்டாளர்கள் நாட்டிற்குள் வரமாட்டார்கள்.  எனவே நாடாளுமன்றில் எத்தகைய சட்டங்களை இயற்றினாலும் ஆயுத கலாசாரம் கட்டவிழ்த்து விடப்படும் போது அது நடக்காது” எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement