காரை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பாகிஸ்தானின் ரிஹி ஷினொ ஹெல் பகுதியில் நேற்று சம்பவித்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் அருகில் உள்ள கிராமத்திற்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலாப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 12 மணியளவில் காரில் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
குறித்த நபர்கள் ரிஹி ஷினொ ஹெல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களின் காரை, மோட்டார் சைக்கிளில் வந்து நபரொருவர் வழிமறித்துள்ளார்.
பின்னர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் காரில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டுத்தள்ளினார். குறித்த நபரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காரில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். மிகுதியிருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்தவரை மீட்ட அப்பகுதி கிராமத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், துப்பாக்கிசூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரை வழி மறித்து துப்பாக்கிச்சூடு; ஒரே குடும்பத்தைச் சேர்நத 7பேர் பலி - ஒருவர் படுகாயம் காரை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பாகிஸ்தானின் ரிஹி ஷினொ ஹெல் பகுதியில் நேற்று சம்பவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் அருகில் உள்ள கிராமத்திற்கு நேற்று சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலாப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 12 மணியளவில் காரில் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.குறித்த நபர்கள் ரிஹி ஷினொ ஹெல் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களின் காரை, மோட்டார் சைக்கிளில் வந்து நபரொருவர் வழிமறித்துள்ளார். பின்னர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் காரில் இருந்தவர்களை சரமாரியாக சுட்டுத்தள்ளினார். குறித்த நபரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காரில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். மிகுதியிருந்த ஒருவர் படுகாயமடைந்தார்.படுகாயமடைந்தவரை மீட்ட அப்பகுதி கிராமத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், துப்பாக்கிசூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.