• Aug 18 2025

நல்லூரில் வன்முறையில் ஈடுபட்ட ஐவருக்கும் விளக்கமறியல்!

Chithra / Aug 18th 2025, 7:37 am
image


நல்லூரடியில் நேற்றுமுன்தினம் வன்முறையில் ஈடுபட்ட ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.

ஐவர் அடங்கிய குறித்த குழு நல்லூரடியில் இருந்த நால்வர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில் காயமடைந்த நால்வரில் இருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தாக்குதலை நடாத்திய ஐவரையும் நல்லூரடியில் கடமையில் இருந்த பொலிசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட ஐவரையும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை நீதிவான் அவர்களை கடுமையாக எச்சரித்த பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


நல்லூரில் வன்முறையில் ஈடுபட்ட ஐவருக்கும் விளக்கமறியல் நல்லூரடியில் நேற்றுமுன்தினம் வன்முறையில் ஈடுபட்ட ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.ஐவர் அடங்கிய குறித்த குழு நல்லூரடியில் இருந்த நால்வர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காயமடைந்த நால்வரில் இருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.இந்நிலையில் தாக்குதலை நடாத்திய ஐவரையும் நல்லூரடியில் கடமையில் இருந்த பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐவரையும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை நீதிவான் அவர்களை கடுமையாக எச்சரித்த பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement