• Aug 18 2025

ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு நாம் முயற்சிக்கவில்லை! - முத்துஐயன்கட்டு சம்பவம் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் கருத்து

Chithra / Aug 18th 2025, 8:44 am
image

 

ஒட்டுச்சுட்டான் - முத்துஐயன்கட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.  

இராணுவ முகாமிற்குள் சில தரப்பினர் அனுமதியின்றி பிரவேசிக்க முற்பட்டமையே இந்த சம்பவத்துக்கான அடிப்படை காரணியாகும். இவ்வாறு உட்பிரவேசித்தவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் அவர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த நபர் தொடர்பில் இதற்கு முன்னரும் அதாவது ஜனவரி 18ஆம் திகதி இதே முகாமிற்குள் நுழைந்து பொருட்களை திருடியமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த தகவல் கிடைத்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய இந்த மரணத்துக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை. பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என்றார். 

ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு நாம் முயற்சிக்கவில்லை - முத்துஐயன்கட்டு சம்பவம் தொடர்பில் இராணுவப் பேச்சாளர் கருத்து  ஒட்டுச்சுட்டான் - முத்துஐயன்கட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.  இராணுவ முகாமிற்குள் சில தரப்பினர் அனுமதியின்றி பிரவேசிக்க முற்பட்டமையே இந்த சம்பவத்துக்கான அடிப்படை காரணியாகும். இவ்வாறு உட்பிரவேசித்தவர்களில் ஒருவர் பிடிபட்ட நிலையில் அவர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.குறித்த நபர் தொடர்பில் இதற்கு முன்னரும் அதாவது ஜனவரி 18ஆம் திகதி இதே முகாமிற்குள் நுழைந்து பொருட்களை திருடியமை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எவ்வாறிருப்பினும் இந்த தகவல் கிடைத்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய இந்த மரணத்துக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை எனத் தெரியவந்துள்ளது.இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக செயற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் முயற்சிக்கவில்லை. பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement