• Aug 18 2025

நல்லூர்க் கந்தனின் விசேட உற்சவங்கள்; சிசிரிவி கமராக்கள் பொருத்தி பலத்த பாதுகாப்பு!

shanuja / Aug 18th 2025, 8:50 am
image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

 

அதற்கமைய, ஆலய வளாகத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் சி.சி.ரி.வி கமராக்கள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக  பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.  


நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்கள் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன. 


நல்லூரானின் உற்சவத்தில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வழமை போன்று பெருந்திரளானவர்கள் உற்சவத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

உற்சவத்தில் கலந்து கொள்ளும் அடியார்களின் பாதுகாப்பின் நிமித்தம்  600 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 

அத்துடன் யாழ்ப்பாண  மாவட்டத்தின் அனைத்து  பொலிஸ் நிலையங்களில் இருந்தும் சிவில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நல்லூர்க் கந்தனின் விசேட உற்சவங்கள்; சிசிரிவி கமராக்கள் பொருத்தி பலத்த பாதுகாப்பு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.  அதற்கமைய, ஆலய வளாகத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் சி.சி.ரி.வி கமராக்கள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக  பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.  நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்கள் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன. நல்லூரானின் உற்சவத்தில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வழமை போன்று பெருந்திரளானவர்கள் உற்சவத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  உற்சவத்தில் கலந்து கொள்ளும் அடியார்களின் பாதுகாப்பின் நிமித்தம்  600 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அத்துடன் யாழ்ப்பாண  மாவட்டத்தின் அனைத்து  பொலிஸ் நிலையங்களில் இருந்தும் சிவில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement