• May 12 2025

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் இன்றுடன் நிறைவு!

Chithra / May 12th 2025, 11:53 am
image

 

சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் விசாக பூரணை தினமான இன்று மத அனுஷ்டானங்களுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைகிறது.

அதன்படி, இன்று சிவனொளிபாத மலையிலிருந்து சிலை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத மலை அடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட பௌத்த விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி வணக்கத்திற்குரிய மொரஹேல சுகதஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிவனொளிபாதமலை யாத்திரை காலம் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி போயா தினத்தன்று ஆரம்பமானது.

புனிதப்பெட்டி மற்றும் சிலை அடுத்த சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்படும் வரை கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையிலுள்ள விகாரை அறையில் வைக்கப்படும்.

அத்துடன் கடந்த ஐந்து மாதங்களில் இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் இந்த யாத்திரையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் இன்றுடன் நிறைவு  சிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் விசாக பூரணை தினமான இன்று மத அனுஷ்டானங்களுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைகிறது.அதன்படி, இன்று சிவனொளிபாத மலையிலிருந்து சிலை உள்ளிட்டவற்றை எடுத்து செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத மலை அடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட பௌத்த விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி வணக்கத்திற்குரிய மொரஹேல சுகதஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, சிவனொளிபாதமலை யாத்திரை காலம் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி போயா தினத்தன்று ஆரம்பமானது.புனிதப்பெட்டி மற்றும் சிலை அடுத்த சிவனொளிபாத மலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்படும் வரை கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையிலுள்ள விகாரை அறையில் வைக்கப்படும்.அத்துடன் கடந்த ஐந்து மாதங்களில் இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் இந்த யாத்திரையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement

Advertisement