• May 13 2025

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கு நடந்த சோகம்

Chithra / May 12th 2025, 7:42 am
image

 

கொழும்பு -  மொரகஹஹேன, மில்லாவ பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளின் வயரைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் நேற்று  மாலை இடம்பெற்றுள்ளது. 

உயிரிழந்தவர் மில்லாவ, தம்மானந்த மாவத்தையில் வசித்து வந்த ஒன்பது வயது சிறுமி ஆவார். 

அவர் இந்த வருடம் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த வட்டரேகா ஜூனியர் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மாணவியாவார்.

சம்பம் நடந்த வீட்டின் முன் பொருத்தப்பட்ட ஒரு ஹோல்டரிலிருந்து மின் இணைப்பு பெறப்பட்டதாகவும், வீட்டின் ஏத் வயர் உடைந்து தரையுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த நிலையில்,

மின்சார இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படவில்லை என்றும் மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.    

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கு நடந்த சோகம்  கொழும்பு -  மொரகஹஹேன, மில்லாவ பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளின் வயரைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று  மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மில்லாவ, தம்மானந்த மாவத்தையில் வசித்து வந்த ஒன்பது வயது சிறுமி ஆவார். அவர் இந்த வருடம் நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த வட்டரேகா ஜூனியர் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மாணவியாவார்.சம்பம் நடந்த வீட்டின் முன் பொருத்தப்பட்ட ஒரு ஹோல்டரிலிருந்து மின் இணைப்பு பெறப்பட்டதாகவும், வீட்டின் ஏத் வயர் உடைந்து தரையுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்த நிலையில்,மின்சார இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படவில்லை என்றும் மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.    

Advertisement

Advertisement

Advertisement