கண்டி-நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள தவலந்தன்னை நகர பொது மலசலக் கூடம், முறையான பராமரிப்பின்றிப் பாவனைக்கு உதவாத நிலையில் சீரழிந்து வருவது அப்பகுதி மக்களிடையேயும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இறம்பொடை வட்டார பிரதேச சபை உறுப்பினர் என்ற ரீதியில் இந்த மலசலக் கூட திருத்தம் தொடர்பாக பல தடவைகள் பிரதேச சபை தலைவரிடம் முறைப்பாடு செய்தினும் இதுவரையில் இதற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
மேலும் கடந்த 2025 ஆம் ஆண்டு பிரதேச சபையினால் இம் மலசலக் கூடம் டெண்டர் விடப்பட்டு குறித்த தரப்பினருக்கு வழங்கப்பட்ட நிலையில் அத்தரப்பினர் இம்மலசலக் கூடத்தை சரிவர நடாத்துவதற்கு பிரதேச சபை தலைவருக்கு இதனை திருத்தித் தருமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் இன்று வரை இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.
கண்டி-நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள இப் பொதுக் கழிப்பறையானது பாவனைக்கு ஏற்புடையாதாக இல்லாத நிலையில் போக்குவரத்து பயனாளிகளுக்கும், ஊர் மக்களுக்கும், சுற்றுலாப் பிரயாணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதுடன் இவ்வாறு அரச சொத்துக்கள் கைவிடப்படும் நிலையானது கேள்விக்குறியாகியுள்ளது.
பிரதான சுற்றுலாத்தள நுழைவாயிலாக கருதப்படும் இறம்பொடை மண்ணானது எந்தவித அபிவிருத்திகளுக்கும் உள்வாங்கப்படாமல் அரசினால் ஒதுக்கப்பட்ட நிலையானது கொத்மலை பிரதேசவாசிகளினால் மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும்.
கொத்மலையினை கொத்மலை கிழக்கு, மேற்கு என பேதப்படுத்தி சேவை வழங்காமல் முழுக் கொத்மலைக்கும் Clean srilanka வேலைத்திட்டத்திற்கு உள்வாங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலந்தன்னை நகர பொது மலசலக் கூடம் விரைவில் சீரமைக்க வேண்டும்-மக்கள் குற்றச்சாட்டு கண்டி-நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள தவலந்தன்னை நகர பொது மலசலக் கூடம், முறையான பராமரிப்பின்றிப் பாவனைக்கு உதவாத நிலையில் சீரழிந்து வருவது அப்பகுதி மக்களிடையேயும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இறம்பொடை வட்டார பிரதேச சபை உறுப்பினர் என்ற ரீதியில் இந்த மலசலக் கூட திருத்தம் தொடர்பாக பல தடவைகள் பிரதேச சபை தலைவரிடம் முறைப்பாடு செய்தினும் இதுவரையில் இதற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை. மேலும் கடந்த 2025 ஆம் ஆண்டு பிரதேச சபையினால் இம் மலசலக் கூடம் டெண்டர் விடப்பட்டு குறித்த தரப்பினருக்கு வழங்கப்பட்ட நிலையில் அத்தரப்பினர் இம்மலசலக் கூடத்தை சரிவர நடாத்துவதற்கு பிரதேச சபை தலைவருக்கு இதனை திருத்தித் தருமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் இன்று வரை இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.கண்டி-நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள இப் பொதுக் கழிப்பறையானது பாவனைக்கு ஏற்புடையாதாக இல்லாத நிலையில் போக்குவரத்து பயனாளிகளுக்கும், ஊர் மக்களுக்கும், சுற்றுலாப் பிரயாணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதுடன் இவ்வாறு அரச சொத்துக்கள் கைவிடப்படும் நிலையானது கேள்விக்குறியாகியுள்ளது. பிரதான சுற்றுலாத்தள நுழைவாயிலாக கருதப்படும் இறம்பொடை மண்ணானது எந்தவித அபிவிருத்திகளுக்கும் உள்வாங்கப்படாமல் அரசினால் ஒதுக்கப்பட்ட நிலையானது கொத்மலை பிரதேசவாசிகளினால் மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும்.கொத்மலையினை கொத்மலை கிழக்கு, மேற்கு என பேதப்படுத்தி சேவை வழங்காமல் முழுக் கொத்மலைக்கும் Clean srilanka வேலைத்திட்டத்திற்கு உள்வாங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.