• Aug 03 2026

ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் தாக்கம் –கடற்பறவைகள் பெருமளவில் உயிரிழப்பு!

Tamil nila / Aug 3rd 2026, 7:52 pm
image

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகருக்குத் தெற்கே அமைந்துள்ள கடலோரப் பகுதியில், H5N1 பறவைக் காய்ச்சல் பரவியதன் காரணமாக சுமார் 50 'கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்' (Greater Crested Tern) வகையைச் சேர்ந்த கடற்பறவைகள் உயிரிழந்துள்ளன.

நாட்டில் கடற்பறவைகள் மத்தியில் இவ்வாறு பெருமளவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது இதுவே முதல் முறை என்பதால், நோய் மேலும் பரவக்கூடும் என ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதன்முதலாக H5N1 வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து, நாட்டின் கோழிப் பண்ணைகள் உள்ளிட்ட கால்நடைத் துறைகளில் கடுமையான உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பண்ணைப் பறவைகளுக்குள் வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடிலெய்டில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கேப் ஜாஃபா (Cape Jaffa) கடலோரப் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போது, 49 இறந்த பறவைகளும் 35 நோய்வாய்ப்பட்ட பறவைகளும் கண்டறியப்பட்டன.

அவற்றின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் H5N1 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய விவசாய அமைச்சர் ஜூலி காலின்ஸ் தெரிவித்துள்ளார்.

தலைநகர் கான்பெராவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், H5N1 வைரஸ் வனவிலங்குகள் மற்றும் பறவைகளிடையே பரவத் தொடங்கியுள்ளதால், எதிர்வரும் காலங்களில் மேலும் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரித்தார்.

மேலும், H5N1 பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு அரிதாகப் பரவக்கூடியதாக இருந்தாலும், உலகளவில் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும், பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து தற்போது குறைவாகவே இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல் தாக்கம் –கடற்பறவைகள் பெருமளவில் உயிரிழப்பு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகருக்குத் தெற்கே அமைந்துள்ள கடலோரப் பகுதியில், H5N1 பறவைக் காய்ச்சல் பரவியதன் காரணமாக சுமார் 50 'கிரேட்டர் கிரெஸ்டட் டெர்ன்' (Greater Crested Tern) வகையைச் சேர்ந்த கடற்பறவைகள் உயிரிழந்துள்ளன.நாட்டில் கடற்பறவைகள் மத்தியில் இவ்வாறு பெருமளவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது இதுவே முதல் முறை என்பதால், நோய் மேலும் பரவக்கூடும் என ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த ஜூன் மாதம் முதன்முதலாக H5N1 வைரஸ் கண்டறியப்பட்டதிலிருந்து, நாட்டின் கோழிப் பண்ணைகள் உள்ளிட்ட கால்நடைத் துறைகளில் கடுமையான உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பண்ணைப் பறவைகளுக்குள் வைரஸ் பரவியதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அடிலெய்டில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கேப் ஜாஃபா (Cape Jaffa) கடலோரப் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் போது, 49 இறந்த பறவைகளும் 35 நோய்வாய்ப்பட்ட பறவைகளும் கண்டறியப்பட்டன.அவற்றின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் H5N1 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய விவசாய அமைச்சர் ஜூலி காலின்ஸ் தெரிவித்துள்ளார்.தலைநகர் கான்பெராவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், H5N1 வைரஸ் வனவிலங்குகள் மற்றும் பறவைகளிடையே பரவத் தொடங்கியுள்ளதால், எதிர்வரும் காலங்களில் மேலும் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரித்தார்.மேலும், H5N1 பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு அரிதாகப் பரவக்கூடியதாக இருந்தாலும், உலகளவில் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள தொற்றுகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும், பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து தற்போது குறைவாகவே இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement