• Aug 04 2026

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்

Chithra / Aug 4th 2026, 10:17 am
image


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளுக்கு மத்தியில், எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றின் ஏற்பாடுகள் தொடர்பில் நாளை (05) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பரீட்சை நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.


எதிர்வரும் நாட்களில் மழையின் தாக்கம் தற்காலிகமாக அதிகரித்துள்ள போதிலும், ஆகஸ்ட் மாதம் பொதுவாக மழை குறைவான காலப்பகுதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், பருவக்காற்றின் தீவிரத்தினால் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தற்காலிகமானது எனவும், எதிர்வரும் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளுக்குப் பின்னர் மழை ஓரளவு குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பமாகவுள்ளதால், அதற்குள் தற்போதைய வானிலை தாக்கம் குறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


மேலும், எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பின்னர் பசுபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகும் சூறாவளி நிலைமையின் தாக்கத்தினால் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரிக்கக்கூடும் எனவும் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.


புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை நிலைமைகளுக்கு மத்தியில், எதிர்வரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றின் ஏற்பாடுகள் தொடர்பில் நாளை (05) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பரீட்சை நடவடிக்கைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.எதிர்வரும் நாட்களில் மழையின் தாக்கம் தற்காலிகமாக அதிகரித்துள்ள போதிலும், ஆகஸ்ட் மாதம் பொதுவாக மழை குறைவான காலப்பகுதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், பருவக்காற்றின் தீவிரத்தினால் ஏற்பட்டுள்ள இந்த நிலைமை தற்காலிகமானது எனவும், எதிர்வரும் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளுக்குப் பின்னர் மழை ஓரளவு குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பமாகவுள்ளதால், அதற்குள் தற்போதைய வானிலை தாக்கம் குறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், எதிர்வரும் 6ஆம் திகதிக்குப் பின்னர் பசுபிக் பெருங்கடல் பகுதியில் உருவாகும் சூறாவளி நிலைமையின் தாக்கத்தினால் நாட்டின் சில பகுதிகளில் மழைவீழ்ச்சி ஓரளவு அதிகரிக்கக்கூடும் எனவும் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement