• Aug 04 2026

மஹர சிறை மோதல்: கைதியின் மரணம் குறித்து முக்கிய தகவல் வெளியீடு!

Tamil nila / Aug 3rd 2026, 8:32 pm
image

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த கைதியின் சடலத்திற்கான உடற்கூற்று பரிசோதனை இன்று (03) பிற்பகல் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் விசேட சட்ட வைத்திய நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.

உடற்கூற்று பரிசோதனையின் அடிப்படையில், உடலில் ஏற்பட்ட காயங்களால் அதிகளவில் இரத்தம் வெளியேறியதே மரணத்திற்கான காரணம் என சட்ட வைத்திய நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பரிசோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்த கைதியின் சடலம் இன்று (03) மாலை வத்தளை பகுதியில் வசிக்கும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மஹர சிறை மோதல்: கைதியின் மரணம் குறித்து முக்கிய தகவல் வெளியீடு மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த கைதியின் சடலத்திற்கான உடற்கூற்று பரிசோதனை இன்று (03) பிற்பகல் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் விசேட சட்ட வைத்திய நிபுணர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.உடற்கூற்று பரிசோதனையின் அடிப்படையில், உடலில் ஏற்பட்ட காயங்களால் அதிகளவில் இரத்தம் வெளியேறியதே மரணத்திற்கான காரணம் என சட்ட வைத்திய நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.பரிசோதனை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்த கைதியின் சடலம் இன்று (03) மாலை வத்தளை பகுதியில் வசிக்கும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement