நாட்டில் தற்போது நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார இன்று (04) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் சில பகுதிகளில் மழை பெய்திருந்த போதிலும், பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, மகாவலி கங்கையின் நாவலப்பிட்டி மற்றும் பேராதனை பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், களனி கங்கையின் மேற்பகுதிகளான கித்துல்கல மற்றும் நோர்வூட் பகுதிகளிலும் நீர்மட்டம் குறைந்து வருவதாக கூறிய அவர், கித்துல்கல பகுதியில் சிறியளவு அதிகரிப்பு பதிவாகியிருந்தாலும் அது அபாயகரமான நிலைமை அல்ல என தெரிவித்தார்.
அவிசாவளை, லென்கொஸ் மற்றும் ஹங்வெல்ல உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் களனி கங்கையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், குறித்த ஆற்றை அண்மித்த பகுதிகளில் வெள்ள நிலைமை மேலும் தீவிரமடையும் சாத்தியம் இல்லை எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, களு கங்கையைச் சூழவுள்ள இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளிலும் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதால், அந்த ஆற்றுப் படுகையில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை என சூரியபண்டார தெரிவித்தார்.
நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகவில்லை என்றும், இன்று 25 மில்லிமீற்றருக்கும் குறைவான மழையே எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால் குறித்த ஆறுகளின் நீர்மட்டம் சிறிதளவு அதிகரித்தாலும் வெள்ள அபாயம் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களும் தற்போது குறைந்து வருவதுடன், அவை அபாய நிலையை எட்டவில்லை எனவும் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்தார்.
வெள்ள நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் இல்லை – நீர்ப்பாசனத் திணைக்களம் நாட்டில் தற்போது நிலவும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார இன்று (04) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.கடந்த 24 மணித்தியாலங்களில் சில பகுதிகளில் மழை பெய்திருந்த போதிலும், பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதற்கமைய, மகாவலி கங்கையின் நாவலப்பிட்டி மற்றும் பேராதனை பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன், களனி கங்கையின் மேற்பகுதிகளான கித்துல்கல மற்றும் நோர்வூட் பகுதிகளிலும் நீர்மட்டம் குறைந்து வருவதாக கூறிய அவர், கித்துல்கல பகுதியில் சிறியளவு அதிகரிப்பு பதிவாகியிருந்தாலும் அது அபாயகரமான நிலைமை அல்ல என தெரிவித்தார்.அவிசாவளை, லென்கொஸ் மற்றும் ஹங்வெல்ல உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளில் களனி கங்கையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், குறித்த ஆற்றை அண்மித்த பகுதிகளில் வெள்ள நிலைமை மேலும் தீவிரமடையும் சாத்தியம் இல்லை எனவும் அவர் கூறினார்.இதேவேளை, களு கங்கையைச் சூழவுள்ள இரத்தினபுரி மற்றும் மில்லகந்த பகுதிகளிலும் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதால், அந்த ஆற்றுப் படுகையில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் இல்லை என சூரியபண்டார தெரிவித்தார்.நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பதிவாகவில்லை என்றும், இன்று 25 மில்லிமீற்றருக்கும் குறைவான மழையே எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதனால் குறித்த ஆறுகளின் நீர்மட்டம் சிறிதளவு அதிகரித்தாலும் வெள்ள அபாயம் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.அத்துடன், அத்தனகலு ஓயா மற்றும் மகா ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களும் தற்போது குறைந்து வருவதுடன், அவை அபாய நிலையை எட்டவில்லை எனவும் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்தார்.