• May 18 2025

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும்- சிறிநாத் எம்.பி வலியுறுத்து..!

Sharmi / May 17th 2025, 4:37 pm
image

 தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு நீதியான தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆறாவது நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் தலைவர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்,கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் சிரேஸ்ட பிரதி தலைவர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இறுதி யுத்ததின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களின் ஆத்மாசாந்திக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து இறுதி யுத்த காலப்பகுதியில் மக்கள் உணவாக கொண்ட உப்பில்லா கஞ்சி பகிரும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள்,கட்சி உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்,

கொத்தணி குண்டுகளாலும் இரசாயன குண்டுகளினாலும் ஒரு சிறிய பகுதிக்குள் அவர்கள் ஒடுக்கப்பட்டு மக்கள் வெளியேறிச்செல்லமுடியாதவாறு தடுக்கப்பட்டு பாரிய கொடூர இனஅழிப்பு நடைபெற்ற தினமாக மே 18காணப்படுகின்றது.

இந்த தினத்தினை ஒருவாரகால அந்த துக்கதினமாக எங்களின் தமிழரசுக்கட்சியானது அனைத்து பகுதிகளுக்கும் தமிழ் மக்களின் செய்தியாக கொண்டுசெல்கின்றோம்.

தமிழ் மக்களின் இந்த இழப்புகளை தமிழ் மக்களின் விடுவிக்காக கொண்டுசெல்லப்படவேண்டும்.இது தொடர்பில் எதிர்கால சந்ததிகள் இதனை உணர்ந்துகொண்டு தொடர்ச்சியாக இதனை முன்னெடுக்கவேண்டும்.

தமிழினம் இந்த நாட்டில் பல வழிகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் இனமாக இருந்துவருகின்றது.சமகாலத்தில் கூட பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.இதனை இந்த அரசாங்கமும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் இனப்படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள் என்ற நிகழ்வு இன்று புலம்பெயர் நாடுகளில் மிக அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுவருகின்றது.இதற்கு இந்த அரசாங்கம் தெரிவிக்கும் எதிர்ப்பானது தமிழின

ப்படுகொலையினை மூடிமறைப்பதற்கான ஒரு செய்தியாக அரசு முயற்சிகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதனைவிடுத்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு நீதியான தீர்வினைப்பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.

அதேநேரம் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கான தமது இன்னுயிர்களை இழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்படும் இந்த நிகழ்வுகளில் தமிழ் மக்கள் தமது ஆத்மாத்மமான உணர்வுகை அர்ப்பணிக்கவேண்டும் என்றார்.


தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியான தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும்- சிறிநாத் எம்.பி வலியுறுத்து.  தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு நீதியான தீர்வினைப் பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆறாவது நாளான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் தலைவர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்,கட்சியின் முன்னாள் செயலாளர் கி.துரைராஜசிங்கம்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் சிரேஸ்ட பிரதி தலைவர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது இறுதி யுத்ததின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களின் ஆத்மாசாந்திக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து இறுதி யுத்த காலப்பகுதியில் மக்கள் உணவாக கொண்ட உப்பில்லா கஞ்சி பகிரும் நிகழ்வுகள் நடைபெற்றன.இந்த நிகழ்வில் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள்,கட்சி உறுப்பினர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்,கொத்தணி குண்டுகளாலும் இரசாயன குண்டுகளினாலும் ஒரு சிறிய பகுதிக்குள் அவர்கள் ஒடுக்கப்பட்டு மக்கள் வெளியேறிச்செல்லமுடியாதவாறு தடுக்கப்பட்டு பாரிய கொடூர இனஅழிப்பு நடைபெற்ற தினமாக மே 18காணப்படுகின்றது.இந்த தினத்தினை ஒருவாரகால அந்த துக்கதினமாக எங்களின் தமிழரசுக்கட்சியானது அனைத்து பகுதிகளுக்கும் தமிழ் மக்களின் செய்தியாக கொண்டுசெல்கின்றோம்.தமிழ் மக்களின் இந்த இழப்புகளை தமிழ் மக்களின் விடுவிக்காக கொண்டுசெல்லப்படவேண்டும்.இது தொடர்பில் எதிர்கால சந்ததிகள் இதனை உணர்ந்துகொண்டு தொடர்ச்சியாக இதனை முன்னெடுக்கவேண்டும்.தமிழினம் இந்த நாட்டில் பல வழிகளில் நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் இனமாக இருந்துவருகின்றது.சமகாலத்தில் கூட பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.இதனை இந்த அரசாங்கமும் உணர்ந்துகொள்ளவேண்டும்.தமிழ் மக்கள் இந்த நாட்டில் இனப்படுகொலைசெய்யப்பட்டுள்ளார்கள் என்ற நிகழ்வு இன்று புலம்பெயர் நாடுகளில் மிக அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுவருகின்றது.இதற்கு இந்த அரசாங்கம் தெரிவிக்கும் எதிர்ப்பானது தமிழினப்படுகொலையினை மூடிமறைப்பதற்கான ஒரு செய்தியாக அரசு முயற்சிகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அதனைவிடுத்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு நீதியான தீர்வினைப்பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.அதேநேரம் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்திற்கான தமது இன்னுயிர்களை இழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்தப்படும் இந்த நிகழ்வுகளில் தமிழ் மக்கள் தமது ஆத்மாத்மமான உணர்வுகை அர்ப்பணிக்கவேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement