முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பனவு எடுக்க சென்ற முதியோர் ஒருவரை கொடுப்பனவு தர முடியாது என துரத்தி விட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு இன்று(14) காலை முதியோர் கொடுப்பனவு எடுக்க சென்ற முதியவர் ஒருவர் கொடுப்பனவுக்காக இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம், தனக்கு நேரம் செல்வதாகவும் என்னை மிக விரைவாக அனுப்பும் படி கேட்டபோது அங்கு நின்ற முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரும் மற்றும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளருமான நபர் அந்த முதியோரை தமக்கு வாக்கு போடவில்லை என ஏசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து அந்த நபர் தற்போது அஞ்சல் அலுவலக உத்தியோகத்தராக இருக்கும் நபரிடம் சென்று முதியவருக்கு கொடுப்பனவு கொடுக்க வேண்டாம் என கூறி சென்றுள்ளார்
இதன்பின் தற்போது உத்தியோகத்தராக இருக்கும் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் சென்ற குறித்த முதியவரை பல கீழ்த்தரமான வாத்தைகளை பயன்படுத்தி பேசியும் முதியோர் கொடுப்பனவு அட்டையினை தூக்கி எறிந்து அஞ்சல் உத்தியோகத்தர் கோபத்தினை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ரூபா 250ற்காக 2km பயணம் செய்து வந்த முதியவர் தனது வாக்கினை குறித்த முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரருக்கு போடவில்லை என அவமானப்படுத்தி அனுப்பி சென்ற சம்பவம் தொடர்பாக இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போவது? இவ்வாறே தொடர்ந்து நடைபெறவிடப்போதா? என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மாதாந்தம் அரசு கொடுக்கும் 250 ரூபாய்: வாங்கச் சென்ற மூதாட்டிக்கு ஏற்பட்ட நிலை. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பனவு எடுக்க சென்ற முதியோர் ஒருவரை கொடுப்பனவு தர முடியாது என துரத்தி விட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு இன்று(14) காலை முதியோர் கொடுப்பனவு எடுக்க சென்ற முதியவர் ஒருவர் கொடுப்பனவுக்காக இரண்டு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம், தனக்கு நேரம் செல்வதாகவும் என்னை மிக விரைவாக அனுப்பும் படி கேட்டபோது அங்கு நின்ற முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரும் மற்றும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளருமான நபர் அந்த முதியோரை தமக்கு வாக்கு போடவில்லை என ஏசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை அடுத்து அந்த நபர் தற்போது அஞ்சல் அலுவலக உத்தியோகத்தராக இருக்கும் நபரிடம் சென்று முதியவருக்கு கொடுப்பனவு கொடுக்க வேண்டாம் என கூறி சென்றுள்ளார் இதன்பின் தற்போது உத்தியோகத்தராக இருக்கும் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் சென்ற குறித்த முதியவரை பல கீழ்த்தரமான வாத்தைகளை பயன்படுத்தி பேசியும் முதியோர் கொடுப்பனவு அட்டையினை தூக்கி எறிந்து அஞ்சல் உத்தியோகத்தர் கோபத்தினை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.ரூபா 250ற்காக 2km பயணம் செய்து வந்த முதியவர் தனது வாக்கினை குறித்த முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரருக்கு போடவில்லை என அவமானப்படுத்தி அனுப்பி சென்ற சம்பவம் தொடர்பாக இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போவது இவ்வாறே தொடர்ந்து நடைபெறவிடப்போதா என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.