• May 28 2025

மகள் கண்முன்னே உடல் நசுங்கி உயிரிழந்த தந்தை!

Chithra / May 27th 2025, 8:55 am
image


கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பெரகல வீதியில், பூம் ட்ரக் ஒன்று கேகாலை நோக்கி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் சாரதி வாகனத்திலிருந்து இறங்கி, நெம்புகோல் அமைப்பின் உதவியுடன் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார். 

இதன்போது, அந்த வாகனத்தின் ஆதரவு அமைப்பு தளர்ந்து, வாகனம் வீதியின் கீழ்நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இதன்போது, பூம் ட்ரக் வாகனத்திற்கு முன்னால், கேகாலை நோக்கி செல்ல தயாராக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறத்துடன் மோதியுள்ளது. 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் அவரது மகள் காயமடைந்து, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்தவர், கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

மகள் கண்முன்னே உடல் நசுங்கி உயிரிழந்த தந்தை கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரகல வீதியில், பூம் ட்ரக் ஒன்று கேகாலை நோக்கி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதன் சாரதி வாகனத்திலிருந்து இறங்கி, நெம்புகோல் அமைப்பின் உதவியுடன் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார். இதன்போது, அந்த வாகனத்தின் ஆதரவு அமைப்பு தளர்ந்து, வாகனம் வீதியின் கீழ்நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதன்போது, பூம் ட்ரக் வாகனத்திற்கு முன்னால், கேகாலை நோக்கி செல்ல தயாராக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்புறத்துடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் அவரது மகள் காயமடைந்து, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர், கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement