கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மூன்று மாடி வீடொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிராண்ட்பாஸ், லெயார்ட்ஸ் ப்ரோட்வே வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (27) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி, உடனடியாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறுமி மேல் மாடியிலிருந்து கீழே விழுந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பில் மர்மத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம் நடந்தது என்ன கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் மூன்று மாடி வீடொன்றின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கிராண்ட்பாஸ், லெயார்ட்ஸ் ப்ரோட்வே வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (27) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.வீட்டின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி, உடனடியாக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சிறுமி மேல் மாடியிலிருந்து கீழே விழுந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.