• Aug 28 2025

கம்மன்பிலவின் கருத்து குறித்து விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி

CID
Chithra / Aug 27th 2025, 8:57 pm
image

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பிலான முறைப்பாட்டை தொடர்ந்தே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில், உதய கம்மன்பில சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கக்கூடிய கருத்துக்களை தெரிவித்ததாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மன்றுரைத்தனர்.

இந்தநிலையில் குறித்த கருத்துக்கள் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ்,குற்றமாகுமா என்பதைத் தீர்மானிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

கம்மன்பிலவின் கருத்து குறித்து விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளனர்.கடந்த 12 ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பிலான முறைப்பாட்டை தொடர்ந்தே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.குறித்த ஊடக சந்திப்பில், உதய கம்மன்பில சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சிதைக்கக்கூடிய கருத்துக்களை தெரிவித்ததாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மன்றுரைத்தனர்.இந்தநிலையில் குறித்த கருத்துக்கள் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ்,குற்றமாகுமா என்பதைத் தீர்மானிக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement