• Aug 26 2025

ரணில் விவகாரம் ; சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்களை கைது செய்ய உத்தரவு

Aathira / Aug 26th 2025, 6:58 pm
image

நீதிமன்ற வளாகத்திற்குள் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி வீடியோக்கள், புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட 

நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் சமீபத்திய நீதிமன்ற விசாரணையின் போது பதிவாகியுள்ளது. 

மேலும் நீதித்துறையின் கௌரவம், ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த சட்டவிரோத செயல்களுக்குப் பொறுப்பான நபர்களை உடனடியாகக் கண்டறிந்து,

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்  சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரணில் விவகாரம் ; சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்களை கைது செய்ய உத்தரவு நீதிமன்ற வளாகத்திற்குள் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி வீடியோக்கள், புகைப்படங்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் சமீபத்திய நீதிமன்ற விசாரணையின் போது பதிவாகியுள்ளது. மேலும் நீதித்துறையின் கௌரவம், ஒழுக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க  உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த சட்டவிரோத செயல்களுக்குப் பொறுப்பான நபர்களை உடனடியாகக் கண்டறிந்து,அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்  சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement