• Aug 27 2025

இலங்கைக்குக் கடத்தவிருந்த வெளிநாட்டு சிகரெட் சரக்குகள் பறிமுதல்!

shanuja / Aug 27th 2025, 10:56 am
image

இலங்கைக்கு கடத்த முயன்ற ஆறு கோடி இந்திய ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட்  சரக்குகளை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்தனர். 


துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபா  பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகள் கடத்தப்படுவதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. 


தகவலுக்கமைய வேம்பார் சோதனை சாவடியில், மரைன் பொலிஸார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 


இதன்போது  சிறிய லொறியொன்றை நிறுத்தி பொலிஸார் சோதனை செய்தனர். அதில், 32 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட் பைக்கட்டுகள் இருந்துள்ளன. 


அந்த வாகனத்தின் சாரதியான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தியர்புரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதானவரை பொலிஸார் கைது செய்தனர். 


சிகரெட் பைக்கட் மூட்டைகள் படகு மூலம் இலங்கைக்கு கடந்த இருந்தது தெரிந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பைக்கட் மூட்டைகளின் பெறுமதி சுமார் 6 கோடியே 40 லட்சம் இந்திய ரூபா என மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்குக் கடத்தவிருந்த வெளிநாட்டு சிகரெட் சரக்குகள் பறிமுதல் இலங்கைக்கு கடத்த முயன்ற ஆறு கோடி இந்திய ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட்  சரக்குகளை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக இலங்கைக்கு பல கோடி ரூபா  பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் பைக்கட் மூட்டைகள் கடத்தப்படுவதாக மரைன் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. தகவலுக்கமைய வேம்பார் சோதனை சாவடியில், மரைன் பொலிஸார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது  சிறிய லொறியொன்றை நிறுத்தி பொலிஸார் சோதனை செய்தனர். அதில், 32 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட் பைக்கட்டுகள் இருந்துள்ளன. அந்த வாகனத்தின் சாரதியான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தியர்புரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதானவரை பொலிஸார் கைது செய்தனர். சிகரெட் பைக்கட் மூட்டைகள் படகு மூலம் இலங்கைக்கு கடந்த இருந்தது தெரிந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பைக்கட் மூட்டைகளின் பெறுமதி சுமார் 6 கோடியே 40 லட்சம் இந்திய ரூபா என மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement