• May 06 2025

கொட்டாஞ்சேனையில் உயிரைமாய்த்த மாணவிக்கு நடந்த கொடூரம்; பெற்றோர் கண்ணீர்மல்க விடுத்த கோரிக்கை

Chithra / May 5th 2025, 7:46 am
image



எனது மகளுக்கு நடந்ததுபோல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்ககூடாது.  எனது மகளின் மரணம் முற்றுபுள்ளியாக இருக்ககூடாது. நியாயம் கிடைக்க வேண்டும் என மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தாயார் 

கண்ணீர்மல்க தெரிவித்தார்.

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர் கடந்த மாதம் 29ஆம் திகதி கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.

குறித்த சிறுமி ஏற்கனவே கல்விகற்ற கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்து கடந்த வருடம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணைகள் தற்போது நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு 

தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.


கொட்டாஞ்சேனையில் உயிரைமாய்த்த மாணவிக்கு நடந்த கொடூரம்; பெற்றோர் கண்ணீர்மல்க விடுத்த கோரிக்கை எனது மகளுக்கு நடந்ததுபோல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்ககூடாது.  எனது மகளின் மரணம் முற்றுபுள்ளியாக இருக்ககூடாது. நியாயம் கிடைக்க வேண்டும் என மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தாயார் கண்ணீர்மல்க தெரிவித்தார்.கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர் கடந்த மாதம் 29ஆம் திகதி கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்தார்.குறித்த சிறுமி ஏற்கனவே கல்விகற்ற கொழும்பின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்து கடந்த வருடம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணைகள் தற்போது நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement