• Jul 20 2025

பேருந்துடன் நேருக்கு நேர் மோதி நொருங்கிய கார் - குழந்தை உட்பட பலர் படுகாயம்!

shanuja / Jul 19th 2025, 8:47 pm
image

தனியார் பேருந்துடன் மோட்டார் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி நொருங்கியதில் காரில் பயணித்த குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்த விபத்துச் சம்பவம் குருநாகல்- நீர்கொழும்பு வீதி கிவுலகல்ல பிரதேச பகுதியில் இன்று (19) இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய வருகையில், 


குருநாகல்- நீர்கொழும்பு வீதி கிவுலகல்ல பிரதேச பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சிறிய மோட்டார் கார் ஒன்று அதே வழியில் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பேரூந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. 


விபத்தில் கார் நொருங்கியதில் அதில் பயணித்த குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் குருநாகல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேருந்துடன் நேருக்கு நேர் மோதி நொருங்கிய கார் - குழந்தை உட்பட பலர் படுகாயம் தனியார் பேருந்துடன் மோட்டார் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி நொருங்கியதில் காரில் பயணித்த குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் குருநாகல்- நீர்கொழும்பு வீதி கிவுலகல்ல பிரதேச பகுதியில் இன்று (19) இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் தெரிய வருகையில், குருநாகல்- நீர்கொழும்பு வீதி கிவுலகல்ல பிரதேச பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த சிறிய மோட்டார் கார் ஒன்று அதே வழியில் பயணித்த தனியாருக்குச் சொந்தமான பேரூந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. விபத்தில் கார் நொருங்கியதில் அதில் பயணித்த குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் குருநாகல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement