• Jul 19 2025

கடும் மழையால் மலையகத்தில் உயர்வடைந்த நீர்மட்டம்!

shanuja / Jul 19th 2025, 7:09 pm
image

மலையகத்தில் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.  


அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.  


கனமழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் இன்று  (19) காலை முதல் நிரம்பி வழிகின்றது அவதானிக்கப்படுகின்றது. 


அத்துடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல்லே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எனவே மலையகத்தின் தாழ்நிலப் பகுதிகளில்  வசிப்பவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் மழையால் மலையகத்தில் உயர்வடைந்த நீர்மட்டம் மலையகத்தில் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்துள்ளதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.  அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.  கனமழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் இன்று  (19) காலை முதல் நிரம்பி வழிகின்றது அவதானிக்கப்படுகின்றது. அத்துடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல்லே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எனவே மலையகத்தின் தாழ்நிலப் பகுதிகளில்  வசிப்பவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement