• Jul 19 2025

பல பகுதிகளில் இன்று காற்று சுழற்றி அடிக்கும்!

shanuja / Jul 19th 2025, 6:42 pm
image

தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் காற்று இன்று சுழற்றி அடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களத்தால் சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, 


நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக  மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 


மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றுடன் கூடிய நிலைமை  அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. 


அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கடந்த சில நாள்களாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென காற்று சுழற்றி அடித்ததால் பல சேதங்கள் ஏற்பட்டதுடன் மக்களும் பதற்றமடைந்தனர். 


திடீரென சுழற்றி அடித்த காற்றால் முன்னெச்சரிக்கையின்றி இருந்த மக்கள் அங்குமிங்கும் எனத் திணறினர். 


இந்தநிலையிலேயே திடீரென ஏற்படும் காற்றை எதிர்கொள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் இன்று காற்று சுழற்றி அடிக்கும் தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் காற்று இன்று சுழற்றி அடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது, நாடு முழுவதும் நிலவும் தென்மேற்கு பருவமழை காரணமாக  மணிக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் காற்றுடன் கூடிய நிலைமை  அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த சில நாள்களாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென காற்று சுழற்றி அடித்ததால் பல சேதங்கள் ஏற்பட்டதுடன் மக்களும் பதற்றமடைந்தனர். திடீரென சுழற்றி அடித்த காற்றால் முன்னெச்சரிக்கையின்றி இருந்த மக்கள் அங்குமிங்கும் எனத் திணறினர். இந்தநிலையிலேயே திடீரென ஏற்படும் காற்றை எதிர்கொள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement