• Sep 22 2026

22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை மக்கள் சக்தியால் தோற்கடிக்க வேண்டும் – சஜித்

dorin / Sep 21st 2026, 3:11 pm
image

அநுர அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், எமது மக்கள் சக்தியைக் கொண்டு அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இப்பாகமுவ பாங்கொல்லையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"தற்போது நாட்டில் பல்வேறு பிரச்சினைகளும் சவால்களும் நிலவும் சூழ்நிலையில், அரசு 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முயன்று வருகின்றது.

இந்தத் திருத்தத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை, ஜனநாயகம், நீதி வழங்கும் பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை சீர்குலைக்கப்படுவதுடன், நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் அடிமையாக மாற்றி நாட்டைச் சர்வாதிகாரப் ஆட்சியை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும்.

அரசுக்கு நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், மக்கள் சக்தியைக் கொண்டே இந்தத் திருத்தத்தை முறியடிக்க வேண்டும்.

மக்கள் சக்தியை எப்போதுமே அற்பமாக எடைபோட முடியாது. இதே மக்கள் சக்தியினாலேயே 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி கூட வீட்டுக்குச் செல்ல நேரிட்டது.

நாட்டில் அநுரகுமார திஸாநாயக்க தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயல்கின்றார். இந்தச் சர்வாதிகாரப் பயணத்துக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது.

கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட பல அரசமைப்புத் திருத்தங்களுக்குக் கையை உயர்த்தியவர்கள் இன்றும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் பொய் மற்றும் ஏமாற்றுகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே நுகர்வோருக்கு எரிபொருளை வழங்குதல் போன்ற எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதி கூறியதுபோல் எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படவோ அல்லது பொருள்களின் விலைகள் குறைக்கப்படவோ இல்லை. குறைந்தபட்சம் 12 இலட்சம் ரூபாவுக்கு 'விட்ஸ்' ரக கார் கூட கிடைக்கவில்லை.

மீனவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட செயலி இன்னமும் வழங்கப்படவில்லை. மீன்பிடி மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு மேலதிக வற்   வரிகளை விதித்து அரசு மக்களை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.

நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறி விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர். உற்பத்திச் செலவு 137 ரூபா ஆகும் நிலையில் விவசாயிகளுக்கு 120 ரூபாவே வழங்கப்படுகின்றது.

வறுமை அதிகரித்துள்ள நிலையில் 'அஸ்வெசும' நிவாரணம் கூட வெட்டப்பட்டு வருகின்றது. நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் சொத்துக்கள் 'பராட்டே' சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படுகின்றது.

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. ரணசிங்க பிரேமதாஸவினால் தொடங்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் கூட நாட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது." - என்றார்.

22ஆவது அரசமைப்புத் திருத்தத்தை மக்கள் சக்தியால் தோற்கடிக்க வேண்டும் – சஜித் அநுர அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், எமது மக்கள் சக்தியைக் கொண்டு அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இப்பாகமுவ பாங்கொல்லையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,"தற்போது நாட்டில் பல்வேறு பிரச்சினைகளும் சவால்களும் நிலவும் சூழ்நிலையில், அரசு 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முயன்று வருகின்றது.இந்தத் திருத்தத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை, ஜனநாயகம், நீதி வழங்கும் பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை சீர்குலைக்கப்படுவதுடன், நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் அடிமையாக மாற்றி நாட்டைச் சர்வாதிகாரப் ஆட்சியை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும்.அரசுக்கு நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், மக்கள் சக்தியைக் கொண்டே இந்தத் திருத்தத்தை முறியடிக்க வேண்டும்.மக்கள் சக்தியை எப்போதுமே அற்பமாக எடைபோட முடியாது. இதே மக்கள் சக்தியினாலேயே 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி கூட வீட்டுக்குச் செல்ல நேரிட்டது.நாட்டில் அநுரகுமார திஸாநாயக்க தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயல்கின்றார். இந்தச் சர்வாதிகாரப் பயணத்துக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது.கடந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட பல அரசமைப்புத் திருத்தங்களுக்குக் கையை உயர்த்தியவர்கள் இன்றும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.அரசின் பொய் மற்றும் ஏமாற்றுகளால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். மின்சாரக் கட்டணத்தைக் குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே நுகர்வோருக்கு எரிபொருளை வழங்குதல் போன்ற எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.ஜனாதிபதி கூறியதுபோல் எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படவோ அல்லது பொருள்களின் விலைகள் குறைக்கப்படவோ இல்லை. குறைந்தபட்சம் 12 இலட்சம் ரூபாவுக்கு 'விட்ஸ்' ரக கார் கூட கிடைக்கவில்லை.மீனவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட செயலி இன்னமும் வழங்கப்படவில்லை. மீன்பிடி மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு மேலதிக வற்   வரிகளை விதித்து அரசு மக்களை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறி விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர். உற்பத்திச் செலவு 137 ரூபா ஆகும் நிலையில் விவசாயிகளுக்கு 120 ரூபாவே வழங்கப்படுகின்றது.வறுமை அதிகரித்துள்ள நிலையில் 'அஸ்வெசும' நிவாரணம் கூட வெட்டப்பட்டு வருகின்றது. நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் சொத்துக்கள் 'பராட்டே' சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படுகின்றது.பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. ரணசிங்க பிரேமதாஸவினால் தொடங்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் கூட நாட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement