• Oct 28 2026

இலங்கையை உலுக்கும் சீரற்ற காலநிலை – மூவர் மாயம்! 462 வீடுகளுக்கு சேதம்! வெளியான அதிர்ச்சித் தகவல்!

Chithra / Oct 28th 2026, 10:39 am
image



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் 5,696 குடும்பங்களைச் சேர்ந்த 21,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய நிலவர அறிக்கையின்படி, 


17 மாவட்டங்களிலுள்ள 109 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். மேலும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் இரண்டு வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், மேலும் 462 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


இதனிடையே, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 173 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.


நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை நிலவி வருவதால், அனர்த்த நிலைமைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையை உலுக்கும் சீரற்ற காலநிலை – மூவர் மாயம் 462 வீடுகளுக்கு சேதம் வெளியான அதிர்ச்சித் தகவல் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்களில் 5,696 குடும்பங்களைச் சேர்ந்த 21,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அண்மைய நிலவர அறிக்கையின்படி, 17 மாவட்டங்களிலுள்ள 109 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் காயமடைந்துள்ளனர். மேலும், மூவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் இரண்டு வீடுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், மேலும் 462 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.இதனிடையே, சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 173 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை நிலவி வருவதால், அனர்த்த நிலைமைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement