இலங்கையின் போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திடும் வகையில், பயணிகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
இதன் ஒரு பகுதியாக, கொழும்பு போர்ட் சிட்டியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் ட்ரோன் ஒன்று இன்றைய தினம் வெற்றிகரமாகச் சோதனைப் பறப்பை மேற்கொண்டுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட EH216-S எனப்படும் இந்த நவீன ட்ரோன், விமானி இல்லாமல் இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது மின்சாரத்தில் இயங்குவதாகவும், ஓடுபாதை இல்லாமலேயே செங்குத்தாக மேலேறி இறங்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஒருமுறை மின்னேற்றம் செய்தால் சுமார் 25 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அதிகாரப்பூர்வ செயல்விளக்கப் பறப்பு எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நடவடிக்கைகள் வெற்றியடைந்தால், அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் வணிக ரீதியான பயணிகள் சேவையை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்டுகிறது.
ஆரம்பத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தச் சேவை பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டம் முழுமையாக வெற்றியடைந்தால் சிகிரியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் சேவையை விரிவுபடுத்துவது குறித்தும் ஆராயப்படுகிறது.
ஆகவே, எதிர்காலத்தில் இலங்கையின் வீதிப் போக்குவரத்துக்கு மாற்றாக வான்வழி டாக்ஸி சேவையும் அறிமுகமாகுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.
இலங்கையில் நிஜமாகும் பறக்கும் ட்ரோன் டாக்ஸி இலங்கையின் போக்குவரத்துத் துறையில் புதிய தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திடும் வகையில், பயணிகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனஇதன் ஒரு பகுதியாக, கொழும்பு போர்ட் சிட்டியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் ட்ரோன் ஒன்று இன்றைய தினம் வெற்றிகரமாகச் சோதனைப் பறப்பை மேற்கொண்டுள்ளது.சீனாவில் தயாரிக்கப்பட்ட EH216-S எனப்படும் இந்த நவீன ட்ரோன், விமானி இல்லாமல் இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இது மின்சாரத்தில் இயங்குவதாகவும், ஓடுபாதை இல்லாமலேயே செங்குத்தாக மேலேறி இறங்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் ஒருமுறை மின்னேற்றம் செய்தால் சுமார் 25 கிலோமீற்றர் தூரம் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் அதிகாரப்பூர்வ செயல்விளக்கப் பறப்பு எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.இதன் ஆரம்ப நடவடிக்கைகள் வெற்றியடைந்தால், அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் வணிக ரீதியான பயணிகள் சேவையை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்டுகிறது.ஆரம்பத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தச் சேவை பயன்படுத்தப்படவுள்ளது.இந்த திட்டம் முழுமையாக வெற்றியடைந்தால் சிகிரியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் சேவையை விரிவுபடுத்துவது குறித்தும் ஆராயப்படுகிறது.ஆகவே, எதிர்காலத்தில் இலங்கையின் வீதிப் போக்குவரத்துக்கு மாற்றாக வான்வழி டாக்ஸி சேவையும் அறிமுகமாகுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.