• Oct 28 2026

திருகோணமலையில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்!இரவு நேரத்தில் நடந்த விபரீதம்

Chithra / Oct 28th 2026, 11:57 am
image


திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த விபத்து நேற்று (27) செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.


விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் ஈச்சிலம்பற்று – பூநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


அதேவேளை, தோப்பூர் – பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மற்றைய இளைஞர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


விபத்துக்குள்ளான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.


விபத்துக்கான காரணம் தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலையில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்இரவு நேரத்தில் நடந்த விபரீதம் திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த விபத்து நேற்று (27) செவ்வாய்க்கிழமை இரவு திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் ஈச்சிலம்பற்று – பூநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை, தோப்பூர் – பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மற்றைய இளைஞர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.விபத்துக்குள்ளான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.விபத்துக்கான காரணம் தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement