எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார, பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 24 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு கடந்த 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக, சந்தேகநபரை இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கமைய, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் உள்ளிட்டோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவிற்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார, பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 24 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.குறித்த வழக்கு கடந்த 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக, சந்தேகநபரை இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.இதற்கமைய, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.