• Oct 27 2026

நான்காவது முறையாக திறக்கப்பட்ட யாழ். நெடுந்தூரப் பேருந்து நிலையம் – இம்முறையாவது நிலைக்குமா?

Chithra / Oct 27th 2026, 2:13 pm
image


யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாகப் பயன்பாடின்றிக் காணப்பட்ட நெடுந்தூரப் பேருந்து நிலையம் இன்று (27) மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்துள்ள குறித்த பேருந்து நிலையத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் பேருந்து சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.


இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


சுமார் 134 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், நீண்டகாலமாக முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல் காணப்பட்டது.


இதனைச் செயற்படுத்துவதற்குக் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவை வெற்றியளிக்காத நிலையில், தற்போது மீண்டும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக, பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பில் வட இலங்கை தனியார் பேருந்து சங்கத்தினால் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.


இந்த நிலையில், நீதிமன்றத்தின் பணிப்புக்கு அமைவாக இணைந்த நேர அட்டவணையின் கீழ் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அதன்படி, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொறுப்பின் கீழ் இணைந்த பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எனினும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் இதுவரை இந்த இணைந்த சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


நான்காவது முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ள இந்த நெடுந்தூரப் பேருந்து நிலையம், இம்முறையாவது தடையின்றித் தொடர்ச்சியாக இயங்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


பல மில்லியன் ரூபா பொதுநிதியில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம் முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, பயணிகளுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நான்காவது முறையாக திறக்கப்பட்ட யாழ். நெடுந்தூரப் பேருந்து நிலையம் – இம்முறையாவது நிலைக்குமா யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாகப் பயன்பாடின்றிக் காணப்பட்ட நெடுந்தூரப் பேருந்து நிலையம் இன்று (27) மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகில் அமைந்துள்ள குறித்த பேருந்து நிலையத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் பேருந்து சேவைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், உள்ளூராட்சி ஆணையாளர் சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.சுமார் 134 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், நீண்டகாலமாக முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல் காணப்பட்டது.இதனைச் செயற்படுத்துவதற்குக் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவை வெற்றியளிக்காத நிலையில், தற்போது மீண்டும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பில் வட இலங்கை தனியார் பேருந்து சங்கத்தினால் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.இந்த நிலையில், நீதிமன்றத்தின் பணிப்புக்கு அமைவாக இணைந்த நேர அட்டவணையின் கீழ் பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதன்படி, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொறுப்பின் கீழ் இணைந்த பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.எனினும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் இதுவரை இந்த இணைந்த சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.நான்காவது முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ள இந்த நெடுந்தூரப் பேருந்து நிலையம், இம்முறையாவது தடையின்றித் தொடர்ச்சியாக இயங்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.பல மில்லியன் ரூபா பொதுநிதியில் அமைக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையம் முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு, பயணிகளுக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement