விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், பயங்கரவாதக் குழுவிடமிருந்து அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற உளவுத்துறை தகவலைக் காரணம் காட்டி, இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த உயர் பாதுகாப்பு எச்சரிக்கையின் காரணமாக, விமான நிலையங்களில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையங்களுக்குள் நுழையும் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுவதால், சில விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக, எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத அச்சுறுத்தல்; இந்திய விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விமான நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், பயங்கரவாதக் குழுவிடமிருந்து அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற உளவுத்துறை தகவலைக் காரணம் காட்டி, இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த உயர் பாதுகாப்பு எச்சரிக்கையின் காரணமாக, விமான நிலையங்களில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்குள் நுழையும் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுவதால், சில விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. விமானப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.