கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்ட சேவை கருமபீடம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
24 மணி நேரமும் செயல்படும் கருமபீடத்தில், தகுதியுள்ள வெளிநாட்டினரின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப் பத்திங்களின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப் பதிரங்கள் வழங்கப்படுகிறது.
தற்காலிக அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு முதல் ஐந்து மாதங்கள் வரை இருக்கும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான உரிமங்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
120 வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்ட சேவை கருமபீடம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது.24 மணி நேரமும் செயல்படும் கருமபீடத்தில், தகுதியுள்ள வெளிநாட்டினரின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப் பத்திங்களின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப் பதிரங்கள் வழங்கப்படுகிறது.தற்காலிக அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு முதல் ஐந்து மாதங்கள் வரை இருக்கும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான உரிமங்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.